டாடா சாம்ராஜ்ஜியம் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் இந்தியா, அரசியல் ரீதியில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தது.
இந்தியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை, இந்தியாவின் முதல் நீராற்றல் மின்சாரம், இந்திய நிறுவனத்தின் முதல் இந்திய கார் என பல பெருமைகளைக் கொண்ட டாடா குழுமத்தில் கூட சில அதிர்ச்சிகரமான முறைகேடுகள் அந்நிறுவன அதிகாரிகளால் கடந்த கால வரலாற்றில் நடந்துள்ளன
இந்தியாவுக்கென தனி அறிவியல் நிறுவனம் அமைப்பது பற்றி அன்றைய வைசிராய் கர்சன் கருதியது என்ன? அறிவியல் நிறுவனம் குறித்து ஜாம்செட்ஜி தன் உயிலில் குறிப்பிட்டது என்ன?
முதலாம் உலகப் போரில் டாடாவின் இரும்பு ஆலை எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ, அதே வேகத்தில் 1918ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின், அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாத அளவுக்கு சூழல் மோசமானது.
இன்று டாடா சாம்ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக ஆளும் ரத்தன் டாடாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிச் செல்ல வேண்டும்
ரத்தன் டாடாவின் தலைமையையும், தொலைநோக்கு பார்வையையும் வெளிக்கொணர்ந்த சம்பவங்களில் டெல்கோ என்றழைக்கப்பட்ட இன்றைய டாடா மோட்டார்ஸ் நிறுவன பிரச்சனைகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் முக்கிய பங்குண்டு
ஒரு மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியம் மக்களால் போற்றப்பட வேண்டுமென்றால், அந்நிறுவனம் மக்களின் மனதைத் தொட்டிருக்க வேண்டும். அப்படி இன்று வரை மக்களின் மனதை டாடா தொட ஒரு வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கும் நிறுவனங்களில் டைட்டனுக்கு தனி இடம் உண்டு
பட்டுக்கும், டாடா குழுமத்துக்கும் என்ன தொடர்பு? இந்தியாவில் பட்டு வளர்ப்பு பிரச்சனைக்கு ஜாம்செட்ஜி கண்ட தீர்வு என்ன? பட்டு வியாபாரத்தோடு, தன் விருந்தினர்கள் கடலில் மிதப்பது போன்ற உணர்வைக் கொடுக்க வேண்டும் என ஜாம்செட்ஜி மனதில் கட்டிய கோட்டையின் பெயர் என்ன? வாருங்கள் தொடங்குவோம்.
ஜே ஆர் டி டாடா எப்படி டாடா நிறுவனத்தை மேற்கொண்டு வழி நடத்தினார் என்பதை இந்த பகுதியில் விரிவாக காண்போம்
1962ஆம் ஆண்டில், டாடா குழுமத்தில் ஒரு இளநிலை அதிகாரியாக பணிக்குச் சேர்ந்த ரத்தன் டாடா படிப்படையாக முன்னேறிக் கொண்டிருந்தார்.
அஜீத் கேர்கர் பிரச்சனையை விட மிகப்பெரிய, ஒட்டு மொத்த டாடா குழுமத்தையும் உலுக்கிய அதிரடி சம்பவம் 2001 - 02 காலத்தில் நடந்தது
Your feedback is valuable to us. Should you encounter any bugs, glitches, lack of functionality or other problems, please email us on [email protected] or join Moon.FM Telegram Group where you can talk directly to the dev team who are happy to answer any queries.