Karuvachi Kaviyam : கருவாச்சி காவியம்

M Visalatchi

கருவாச்சி காவியம்

  • 16 minutes 57 seconds
    Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் இறுதி பாகம்
    ....... வந்து நிக்கிறா கட்டையன் வீட்டு வாசல்ல. அவ வாக்கப்பட்ட வீடு; இத்துனூண்டு வாழ்ந்த வீடு; அவ கன்னி கழிஞ்ச வீடு; அவ கர்ப்பத்துக்குள்ள காறித் துப்புன வீடு .
    2 November 2020, 4:24 am
  • 17 minutes 30 seconds
    Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 41
    முப்பத்தேழு வருஷத்துக்கப்புறம் வாக்கப்பட்ட வீடு தேடி எட்டு வச்சு போறா........ இன்னைக்கு என்னமோ நடக்கப் போகுது இந்த பூமியிலன்னு மேகச் சந்து வழி உத்து உத்து பாக்குது ஓரம் தேஞ்சு ஒச்சமாகிப்போன உச்சி நெலா.
    30 October 2020, 11:10 am
  • 14 minutes 39 seconds
    Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 40
    பாவிப்பய 'அய்யோ' ன்னு சொல்ல வந்தானோ? 'அய்யக் கா'ன்னு சொல்ல வந்தானோ?
    29 October 2020, 3:05 am
  • 13 minutes 33 seconds
    Karuvachi Kaviyam - கருவாச்சி காவியம் அத்தியாயம் 39
    "நீயாடா எம் பிள்ள? எம் பிள்ள நீயாடா? ஒன்னிய பாக்காம நான் செத்திருக்கணுமடா; இல்ல நான் வருமுன்னே நீ செத்திருக்கணுமடா" - கருக்குழியில தீப்புடிக்க கத்துறா கருவாச்சி.
    28 October 2020, 1:54 am
  • 13 minutes 32 seconds
    Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 38
    "பெத்த அப்பன் செத்துக் கெடக்கான். கதவை சாத்திட்டு படுத்துக்கெடக்கானே கட்டையன் . கூப்பிடுங்கப்பா அவன."...........
    24 October 2020, 8:49 am
  • 13 minutes 18 seconds
    Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 37
    "ஏண்டா ராசா இப்படி பண்ணின? என்னடா குறை வச்சேன் ஒனக்கு? ஒம் மேல என் சுண்டு விரல் பட்டிருக்குமா? ஒரு சுடுசொல் சொல்லி இருப்பனா? புழுக்கச் சோளம் வாங்கி நான் கஞ்சி காய்ச்சிகிட்டு ஒனக்கு அரிசி வாங்கி ஆக்கிப்போடலையா? களையெடுக்கப் போயி செம்புழுதியில பெரண்ட சீலய நான் கட்டிகிட்டு ஒந் துணிய வெள்ளாவிக்கு போட்டு வெளுத்து வாங்கி வைக்கலையா?...... களையெடுக்க போனாலும் உன் கிட்ட சொல்லிட்டு போவேனடா... நீ கல்யாணம் முடிச்சதையே சொல்லாம போயிட்டி யேடா."
    23 October 2020, 7:57 am
  • 13 minutes 32 seconds
    Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 36
    "உனக்குத் தெரியாத ஒரு கதையும் சொல்லட்டுமா?".... பதறிப்போன கருவாச்சி "என்ன கதையடி ஆத்தா?".... "அழகு சிங்கம் பொண்டாட்டி இப்ப முழுகாம இருக்கா"......
    21 October 2020, 11:28 am
  • 13 minutes 39 seconds
    Karuvachi Kaviyam - கருவாச்சி காவியம் அத்தியாயம் 35
    ............ அடைக்குது கருவாச்சி கதவு ; அரவமில்லாம கமுக்கமா தொறக்குது திம்சோட கடந்தகால கதவு........
    20 October 2020, 12:48 am
  • 13 minutes 16 seconds
    Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 34
    சிங்கத்தையே கழுதையா மாத்துனவளுக்கு நரிய நாயா மாத்த எம்புட்டு நேரம் ஆகும்?...... மாத்திப்புட்டா: தன் சவுரிமுடிங்கிற சாட்டை யில சும்மா பம்பரமா சுத்தி சுழட்டி விட்டுட்டா கட்டையன.
    15 October 2020, 2:05 am
  • 12 minutes 49 seconds
    Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 33
    ஏண்டா தங்கம் ஏதுடா உனக்கு துட்டு? " அங்கிட்டு பார்த்துகிட்டே சொன்னான் அழகு சிங்கம்- "நல்லத்தா குடுத்துச்சு" "நல்லத்தானா...?". "அதான்.... திம்சு ". புழுதியில கிடந்த ஒரு முள்ளு சுருக்குன்னு கால்ல குத்த, அவன் சொன்ன சொல்லு நறுக்குனு நெஞ்சுல குத்த, ரெண்டு வலியில எந்த வலி பெருங்கொண்ட வலின்னு தெரியாம நிண்ட இடத்தில நின்டு போனா கருவாச்சி, ஒத்த காலம் மட்டும் ஒசக்க தூக்கி.
    10 October 2020, 9:59 am
  • 13 minutes 18 seconds
    Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 32
    "நல்லபாம்பு வெரட்னா மட்டும் நேரா ஓடப்படாதடி, வளஞ்சு வளஞ்சு ஓடு நாத்தான் தப்பிக்கலாம்". ஆத்தா பெரிய முக்கி எப்பவோ சொன்னது இப்ப நெஞ்சு குழியில வந்து நிக்கிது !
    8 October 2020, 2:51 am
  • More Episodes? Get the App